Aran Sei

காங்கிரஸின் தொடர் தோல்விகளின் எதிரொலி: காரணங்களை ஆராய கூடுகிறது செயற்குழு

ண்மையில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் குறித்து ஆராய, காங்கிரஸ் செயற்குழு கூடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அண்மையில், தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டபேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் ஆட்சியை கைபற்றியுள்ள திமுக கூட்டணியின் சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.

மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து களமிரங்கிய காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாமல் போனது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் தலைவராக வேண்டும்’ – தொடர்ந்து வலியுறுத்தும் சிவசேனா

140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டபேரவையில், 41 தொகுதிகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்து, எதிர்கட்சியாகவே தொடரவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

அசாம் மாநில சட்டபேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, 75 தொகுதிகள் வேண்டுமென்ற நிலையில், 50 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றது. பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியானது என்ஆர்காங்கிரஸ்-பாஜக கூட்டணியிடம் தோல்வியுற்று ஆட்சியை இழந்தது.

‘மம்தா பானர்ஜி இன்று நம் நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார்’ – காங்கிரஸ் தலைவர் கமல் நாத்

இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களிலும், கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி, பீகார் சட்டபேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியிருந்தது.

இந்நிலையில், நேற்று (மே 7), இணையவழியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் பேசிய இடைக்கால தலைவரான சோனியா காந்தி, “கெடுவாய்ப்பாக, அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதத்திலும், எதிர்பார்க்காத வகையிலும் அமைந்திருக்கிறது. ஆனால் ஒரு கட்சியாக, இத்தகைய பின்னடைவிலிருந்து பொருத்தமான படிப்பினைகளை நாம் அடக்கத்துடன் கற்றுக்கொள் வேண்டும் என்பதை இந்தத் தோல்விகள் நமக்குச் சொல்லாமல் சொல்ல்கிறது.” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

‘மிகுந்த ஏமாற்றமாகவும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கிறது’ – காங்கிரஸின் செயற்பாடு குறித்து சோனியா காந்தி கருத்து

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட குழுவான காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி ஆராயும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் மே 10 ஆம் தேதி, காங்கிரஸ் செயற்குழு கூடி, அண்மைய சட்டபேரவைகள் குறித்து ஆராயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்து நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டபேரவைத் தேர்தல்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்