Aran Sei

ஆட்சிக்கு வந்தால் கும்பல் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும் – காங்கிரஸ் உறுதி

உத்தரப்பிரதேசத்தில்  கும்பல் கொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டுள்ளதாகவும்,  ஒருவேளை  வரும் 2௦22 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் இம்ரான் பிரதாப்கர்ஹி, இஸ்லாமியர்கள்மீதான பிரச்சனைகளைத் தீர்க்கச் சட்டரீதியான குழு  அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைத்தக் கூட்டத்தில் பேசிய இம்ரான் பிரதாப்கர்ஹி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக்கூட்டத்தில் பேசிய மாநில சிறுபான்மையினத் தலைவர் ஷாநவாஸ் ஆலம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கும்பல் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தக்கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்