Aran Sei

குஜராத்தில் வழங்கப்பட்ட 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்கள் – அரசு விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

குஜராத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரையிலான காலத்தில், 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் மற்றும் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோகில் ஆகியோர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

”குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் இருந்து எடுத்த புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதிவரை 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்களை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 58 ஆயிரம் இறப்பு சான்றிதழ்தான் வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவெங்கும் தண்ணீரில் கிடைக்கும் யூரேனியம் – அணு ஆராய்ச்சி மைய ஆய்வில் தகவல்

மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், குஜராத் மாநிலத்தில் 4,218 பேர் மட்டுமே கொரோனாவில் இற்ந்துள்ளனர் என அரசு அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளது.

”இந்நிலையில், இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டைவிட (58,023 இறப்பு சான்றிதழ்கள்) 65,085 இறப்பு சான்றிதழ்கள் அதிகமாக வழங்கப்பட்டதில் உள்ள முரண்பாட்டைக் குஜராத் அரசும், இந்திய ஒன்றிய அரசும் விளக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

”எவ்வாறு இறப்பு சான்றிதழ்கள் அதிகரித்தது என்பதை அரசு விளக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதற்கு கொரோனா தொற்று தான் காரணம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை அரசு மறைக்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ” என குறிப்பிட்டுள்ளனர்.

‘கோமியமும் சாணமுமல்ல அறிவியலே கொரோனாவை குணப்படுத்தும்’ – சமூக வலைதளப் பதிவிற்கு இருவர் கைது

”கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைத்து வெளியிடுவது தொடர்பாக சில மாநில அரசுகள்மீதும், இந்திய ஒன்றிய அரசுமீதும் எங்ககளுக்கு சந்தேகம் இருக்கிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அது ஒரு தேசிய அவமானம் ஆகும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

”கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டவை தொடர்பாக  அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து அறிக்கை கேட்டுப் பெற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்” என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

”கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விசாரணையின்போது காங்கிரஸ் கட்சியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்து மாநில அரசுகளும் இறப்பு சான்றிதழ் வழங்கிய விவரங்கள் தாக்கல் செய்யக் கோரப்படும்” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் மற்றும் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோகில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்