Aran Sei

‘யோகி ஆதித்யநாத்தின் உரை மூலம் தெரிகிறது கலாச்சார காவலர்களின் அறிவு’ – காங்கிரஸ் விமர்சனம்

credits : the hindu

சாமில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமூக சீர்திருத்தவாதி சங்கராதேவா பற்றி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

126 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மூன்று ( மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 16) கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், அசாமின் லங்கா பகுதியில், நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பேசிய யோகி ஆதித்யநாத், ” பிரம்மபுத்திர நதி ஒடும், மாபெரும் சங்கராதேவாவின் மண்ணிற்கு வந்ததில் பெருமை அடைகிறேன்.  இவர், அசாமை காப்பாற்றிய இந்திய கலாச்சார தேசியவாதத்தின் பிரகாசமான ஒளிவிளக்கு. ஒரு வேளை காங்கிரஸ் அதனுடைய சதி வேலையிலும், சிறுபான்மையினர் ஆதரவு அரசியலிலும் வெற்றிப் பெற்றிருந்தால்,  இந்த மண் ஊடுருவக்காரார்களால், தேசிய பாதுகாப்புக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியிருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு – யோகி ஆதித்யநாத்

தொடர்ந்து பேசிய அவர், “சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் குறித்து அப்போதே சங்கராதேவா எச்சரித்திருந்தார். அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினர் ஆதரவு அரசியலையே கையில் எடுத்துள்ளது, மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ நல்வாழ்வைப் பற்றியோ காங்கிரசுக்கு கவலை இல்லை. இதனால், அசாம் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர்” என்று பேசியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு, அசாம் மாநில காங்கிரசின் ஊடக பிரிவு தலைவர், பபீத்தா ஷர்மா, கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “கலாச்சாரத்தைக் காப்பாற்ற போகிறோம் என்று கூறுபவர்களின் அறிவு எத்தகையது என்பது யோகி ஆதித்யநாத்தின் உரை மூலம் தெரிகிறது. 15 ஆம் நூற்றாண்டில், சங்கராதேவா ஊடுருவல்காரர்களை எதிர்த்தார் என்று பேசுவதற்கு முன்னர் யோகி ஆதித்யநாத் வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

மதமாற்ற தடைச் சட்டம்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவாலாக விளங்கும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

மேலும், சமூக சீர்திருத்தவாதியான சங்கராதேவா உருவ வழிபாடுகளை ஒழிக்க வேண்டும் எனவும் மனுஸ்ம்ரிதியை பயன்படுத்தும் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் எனவும் போராடியவர். “சமூகத்தை ஒன்றிணைக்க பாடுபட்ட அவர், சாதி அமைப்புக்கு எதிராகவும் செயல்பட்டார்” என்றும் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்