பீகார் மாநில சட்டப்பேரவையில் ஆயுதமேந்திய காவல்துறை மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்கட்சியினரை நிதிஷ்குமார் அரசு வலுக்கட்டயமாக வெளியேற்றியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பக் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) பீகார் சட்டப்பேரவை நிகழ்வின்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுள்ளனர். பின்னர், அவர் காவல்துறையினரை அழைத்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்த வெட்கக்கேடான சம்பவம் மூலம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முழுவதுமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிடியில் இருப்பது நிருபணமாகியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.
”ஜனநாயக்தை அழிக்கும்” செயலை மேற்கொள்பவர்கள் தங்களை அரசாங்கம் என கூறிக்கொள்ளும் தகுதியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#बिहार विधानसभा की शर्मनाक घटना से साफ़ है कि मुख्यमंत्री पूरी तरह RSS/BJP-मय हो चुके हैं।
लोकतंत्र का चीरहरण करने वालों को सरकार कहलाने का कोई अधिकार नहीं है।
विपक्ष फिर भी जनहित में आवाज़ उठाता रहेगा- हम नहीं डरते!
— Rahul Gandhi (@RahulGandhi) March 24, 2021
நாடாளுமன்றத்தில் இந்தச் சம்பவம்குறித்து விவாதிக்க மாநிலங்களவை உறுப்பினரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான மனோஜ் ஜா நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக கேள்வி எழுப்பக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.
சீருடை அணிந்த காவலர்களால் சட்டமன்றத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் மிஸ்ரா சாதாரண உடையில் இருப்பவர்களால் தாக்கப்பட்ட ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஜனதா தளம் கட்சி “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரை தாக்கியதன் மூலம், ஜனதா தளம் கட்சி ஜனநாயகத்தின் மாண்பை சிதைத்துவிட்டது” என பதிவிட்டிருந்தார்.
प्यारे देशवासियों,
ये फ़ोटो देख कर ज़रूर चौंकिए,
अपनी आत्मा के अंदर झांकिए,
मन के दरवाज़े खोल सोचिए,क्या ये है मोदी जी-नीतीश बाबू का “कोपरेटिव फ़ेडरलिज़म”?
अगर #Bihar विधानसभा में ये गुंडई हो रही है तो क्या देश और सविंधान सुरक्षित है?
क्या ये है सुशासन?#बिहार_विधानसभा pic.twitter.com/bLm09uoD4u
— Randeep Singh Surjewala (@rssurjewala) March 24, 2021
”யாரையும் சிறையில் அடைக்கும் அதிகாரத்தைக் காவல்துறைக்கு வழங்கும் ஆயுந்தமேந்திய காவல்துறை மசோதாவை எதிர்த்ததற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெண் உறுப்பினர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை” என கூறிய சுர்ஜேவாலா, “குடிமக்கள் குரல் எழுப்ப இது தான் சரியான தருணம்” என தெரிவித்திருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.
காதலிக்க மறுத்ததால் அமிலவீச்சுக்கு உள்ளான பெண் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
மேலும் “ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இன்றும் குரல் எழுப்பாவிட்டால் ஜனநாயகம் மிச்சமிருக்க முடியாது. பாஜகவுக்கு வன்முறை செயல்பாடு ஒரு அரசியல் வழியாகிவிடும்” என சுர்ஜேவாலா கூறியதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.