Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: குடியரசுத்தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு

க்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ராம்நாத் கோவிந்திற்கு அக்கட்சி கடிதம் எழுதியுள்ளது.

வன்முறை தொடர்பாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் இக்கடிதத்தை எழுதியுள்ளது.

குடியரசுத் தலைவரைச் சந்திக்க விரும்பும் ஏழு பேர் கொண்ட குழுவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜுன் கார்கே, குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால் மற்றும் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர்.

காங்கிரஸ் தனது கடிதத்தில், உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் பட்டப்பகலில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

மேலும், “ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது கண்டனத்திற்கு உரியது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ஜீப்பின் கீழ் விவசாயிகள் நசுக்கப்பட்டு இறந்தது துயர் மிகுந்தது. அஜய் மிஸ்ராவின் மகன்தான் அக்காரை ஓட்டி வந்ததாக, நேரில் கண்ட சாட்சிகளாக விவசாயிகள் இருக்கிறார்கள்” என்று  கூறியுள்ளது.

லக்கிம்பூர் கேரி சம்பவம் குறித்த உண்மை தகவல்கள் அடங்கிய குறிப்பை அவர்கள் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்