Aran Sei

உச்சநீதிமன்ற மேற்பார்வையில் பொறியியல் கல்வி நுழைவுத்தேர்வு முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்

பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வில் (JEE) நடந்த முறைகேடு தொடர்பாக 7 பேரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ள நிலையில், ’மோசடி’ தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், தேசிய தேர்வு முகமைகள் நடத்தும் பிற தேர்வுகளின் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான மோசடிகளுக்கு கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமை பொறுப்பேற்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மேலும், “இது தேர்வுத்தாள் கசிவுடன் குழப்பமடையக் கூடாது, இது பொதுவாக தேர்வை ரத்து செய்வதற்கு தகுதியானது மட்டுமே இங்கு தேர்வுத்தாள் கசிவு இல்லை” என்றும் கூறியுள்ளார்.

source: the indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்