பேச்சுகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி இப்போதாவது செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
நேற்று (மே 21), இணையவழியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், “பேச்சுகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி இப்போதாவது செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒன்றிய அரசின் செயற்பாடுகளும், பிரதமரின் செயற்பாடுகளும் இந்த தொற்றுநோய் பேரிடரில் முற்றிலுமாக எங்குமே காணப்படவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்
“நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதைதான் நாடு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து நடவடிக்கைகள்தான் தேவை. கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே, கொரோனா குறித்து ராகுல் காந்தி பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் எல்லோரும் அதைப் புறக்கணித்துவிட்டு, ராகுல் காந்தியை கேலி செய்தனர்.” என்று கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த மார்ச் மாதம், 21 நாள் நாடு தழுவிய பொது ஊரடங்கை அறிவிப்பதற்கான தனது உரையில் பிரதமர் மோடி, “மகாபாரதப் போர் பதினெட்டு நாட்களில் வென்றெடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போர் இருபத்தியொரு நாட்களில் முடியும்.” என்று கூறியிருந்தார்.
தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய அரசின் நடவடிக்கை மனவேதனையைத் தருகிறது – மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்
அதை நினைவூட்டிய கே.சி.வேணுகோபால், பிரதமர் இப்போது அதை ஒரு நீண்ட போர் என்பதை உணர்ந்திருப்பார் என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.