Aran Sei

‘ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் பலவீனப்படுத்துவதுதான் பாஜகவின் சித்தாந்தம்’ – காங்கிரஸ் விமர்சனம்

னநாயகத்தின் அனைத்து தூண்களையும் பலவீனப்படுத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்றும் மகாத்மா காந்தியால் மட்டுமே கோட்சே சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று (செப்டம்பர் 19), அகில இந்திய பிடிஐ ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட்டத்தில், உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் லலன் குமார் கலந்துக்கொண்டுள்ளார்.

அப்போது பேசியுள்ள அவர், “ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் வலுப்படுத்தவே காங்கிரஸ் வேலை செய்து வந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘பொய்கள், பொய்கள், எண்ணிலடங்கா பொய்களை சொல்லும் உ.பி. அரசு’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

மேலும், “ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள்தான்  பாஜகவின் சித்தாந்தம். இதை மகாத்மா காந்தியின் அகிம்சை சித்தாந்தத்தால்தான் தோற்கடிக்க முடியும்.” என்று லலன் குமார் குறிப்பிட்டுள்ளார்.

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா குறித்து பேசுகையில், “பிடிஐயானது பத்திரிக்கை துறையின் மதிப்புகளைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், வளப்படுத்தியும் உள்ளது. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டதற்கான நோக்கமும் குறிக்கோள்களும் இன்றைய கடினமான காலங்களில் கூட, நெறிபிழறாது நேர்மையுடன் நிறைவேற்றப்படுகின்றன.” என்று அவர் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்