Aran Sei

ராகுல் மன்னிப்பு கோரியது போல், குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்கட்சிகள்

ந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்தது தவறு என்று ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோரியது போன்று, குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் (மார்ச் 2), மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய ‘அவசரநிலை’ (Emergency) தவறான முடிவு என்றும், அந்த காலகட்டத்தில் நடைபெற்றவை தவறானவை என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரபல பொருளாதார நிபுணர் கௌசிக் பாசுவுடனான உரையாடலின்போது தெரிவித்திருந்தார்.

” இந்திரா காந்தியின் அவசர நிலை தவறான முடிவு ” – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து

மேலும், அவசரநிலை காலகட்டத்தில் அரசியலமைப்பு உரிமைகளும், தனிமனித உரிமைகளும் தடை செய்யப்பட்டு, ​​ஊடகங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன என்றும், பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 3) செய்தியாளர்களை சந்தித்த நவாப் மாலிக், “45 ஆண்டுகளுக்குப் பிறகு, அவசரநிலை காலகட்டத்தை அறிவித்தது தவறு என்று, ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். 1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரங்களுக்காகவும் காங்கிரஸ் மன்னிப்பு கோரியுள்ளது. இப்போது, குஜராத் கலவரம் தவறு என்று பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமிது. அதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘இந்தப் பொற்கால ஆட்சியில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும்’ – குஜராத் முதல்வர் விஜய் ருபனி

மேலும் அச்செய்தியில், மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோல், “ராகுல் ஜி, நடந்த பழைய தவறுக்காக மன்னிப்பு கேட்பதில் எந்த தவறுமில்லை. இது ஒரு மகத்தான நகர்வு. குஜராத் கலவரம் என்பது மனிதநேயத்தின் மீது படிந்த களங்கம். பாஜகவும் மோடியும் இதற்கு மன்னிப்பு கேட்பார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்