Aran Sei

லுங்கி, குல்லா அணிபவர்கள் குறித்து உ.பி., துணை முதலமைச்சரின் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம்

த்தரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவின் லுங்கி குறித்தான கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஷீத் ஆல்வி, லுங்கி அணிந்தவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்று கூறியுள்ளார்.

நேற்று(டிசம்பர் 4), பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த உத்தரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, “உத்தரபிரதேசத்தில் நடந்த முந்தைய ஆட்சியில், லுங்கியும் குல்லாவும் அணிந்தவர்கள் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுத்துக்கொண்டிருந்தனர். 2017-க்குப் பிறகு, உத்தரபிரதேசத்தில் பாஜக அரசு அமைந்தது முதல், இதுபோன்ற குற்றவாளிகளை காண முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

2017க்கு முன், இங்கு எத்தனை லுங்கி அணிந்த குற்றவாளிகள் சுற்றித் திரிந்தார்கள்? வியாபாரிகளை துப்பாக்கி ஏந்தியபடி மிரட்டிய குல்லா அணிந்தவர்கள் யார்? உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து, காவல்துறையிடம் போகக் கூடாது என உங்களை மிரட்டியது யார்?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ரஷீத் ஆல்வி, “உத்தரபிரதேசத்தில் உள்ள இந்து மக்களில் பாதி பேர் லுங்கி அணிகிறார்கள். மவுரியாவின் கருத்தின்படி பார்த்தால், லுங்கி அணிந்தவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று அர்த்தமா? உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து இதுபோல பேசுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், பாஜகவின் திட்டத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் இந்த உண்மையைக் கண்டு பாஜக பயங்கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்