மாநில அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க கூட்டுறவு சங்கங்களில் ஆளும் அதிமுக உறுப்பினர்கள் செயல்படுவதை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எம்.கே.எம். மீனாச்சி சுந்தரம், கூட்டுறவு சங்கங்களுடன் தொடர்பில்லாத ஆளும் கட்சி செயற்பாட்டாளர்களை ரேஷன் கடைகளில் அனுமதித்ததற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். “அரசாங்க நல உதவிகளை விநியோகிக்கும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற செயல்பாட்டாளர்களை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் அமைப்பின் ஒரு பகுதியாக இல்லாதவர்களை மட்டுமே நாங்கள் எதிற்கிறோம்” என்று அவர் கூறினார்
அரசின் விதிகளுக்கு எதிராக, ஆளும் கட்சி அதிமுக வினர் கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ பதாகைகள் அமைத்திருந்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
”இது ஏழை மற்றும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்கு ஆளும் கட்சியின் மலிவான அரசியல், அரசாங்கத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது. அதிமுக தனது கட்சி நிதியில் இருந்து இதுபோன்ற பரிசுத் தொகுப்புகளைத் தந்து அதற்கான விளம்பரம் பெறட்டும்” என்றும் மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
ஆளும் கட்சி கூட்டுறவு சங்கத்தின் விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், பதாகைகளை (பேனர்) அமைப்பதற்கு எதிராக மெட்ராஸ் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் மீனாட்சிசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்கள் கூட்டுறவு பதிவாளர் திலிப்குமாரிடம் புகாரளித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் வெளியாட்களை அனுமதிக்க வேண்டாம் என்று செயலாளர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பதிவாளர் கூறியுள்ளார். ”இதுபோன்ற மீறல்கள் தொடர்ந்தால், நாங்கள் ரேஷன் கடைகளை முற்றுகையிடுவோம், ”என்று மாவட்ட தலைவர் மீனாச்சி சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.