Aran Sei

‘உங்களுடைய பேஸ்புக், வாட்சப் விளம்பரத்திற்‌காக நாட்டை விற்காதீர்கள்’- பாஜகமீது ராகுல் காந்தி விமர்சனம்

நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுதலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று (02.02.22) பேசியபோது பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்.

குடியரசுத் தலைவரின் உரையில் முக்கியமான சில விஷயங்கள் விடுபட்டுப் போகிறது அதைத்தான் நான் விவாதிக்க விரும்புகிறேன்.

இங்கே இரண்டு இந்தியா இருக்கிறது. ஒரு இந்தியா, அதிகமான செல்வவளம் கொண்டிருக்கிற பணக்காரர்களுக்கானது. அவர்களிடம் அதிகப்படியான அதிகாரம் இருக்கிறது. சக்தி குவிந்திருக்கிறது. அந்த இந்தியாவில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேவைப்படுவதில்லை. தண்ணீர், மின்சார இணைப்புகள் தேவைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தான் இந்த நாட்டின் இதயத் துடிப்பை கட்டுப்படுத்துகிறார்கள்.

இன்னொரு இந்தியா இருக்கிறது, இடையில் தடங்கள் ஏற்பட்டுவிட..

சிறிய அமளிக்கு பின்னர் மீண்டும், ராகுல்காந்தி பேசத் தொடங்கினார்

நான் பேசுவது விமர்சனம் செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல,

இரண்டு இந்தியாக்கள் உருவாகி வருகின்றன. ஒன்று பணக்காரர்களின் இந்தியா மற்றொன்று ஏழைகளின் இந்தியா. இந்த இரண்டு இந்தியாவுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தபடியே இருக்கிறது. இதற்கு முன்னர் 2 பேர் உரையாற்றினீர்கள். ஆனால், நீங்கள் உத்தரப்பிரதேசத்தில் ரயில்வேயில் எப்படியாவது வேலை வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் கூறவில்லை. என்ன நடந்தது என்றும் கூறவில்லை.

“எத்தனை காலமானாலும் நீங்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது” – பாஜகவை புரட்டியெடுத்த ராகுல் காந்தி

ஏழை இந்தியாவிடம் இன்று வேலைவாய்ப்புகள் இல்லை. குடியரசுத் தலைவர் உரையில் வேலையின்மை தொடர்பாக ஒரே ஒரு வார்த்தை கூட இல்லை. இன்று மொத்த இந்தியாவிலும் இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் உத்திரப்பிரதேசம் பீகார் என அனைத்து மாநிலங்களிலும்…இந்திய இளைஞர்கள் ஒரே ஒரு கோரிக்கையைதான் வைக்கிறார்கள். எங்களுக்கு வேலை கொடுங்கள். ஆனால் உங்களுடைய அரசாங்கத்தால் அதை தர முடியவில்லை.

நான் உங்களுக்கு தரவுகளையே தருகிறேன். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 கோடி இளைஞர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள். நீங்கள் வேலை கொடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். 2021ஆம் ஆண்டில் மட்டும் 3 கோடி இளைஞர்கள் தங்களது வேலையை இழந்திருக்கிறார்கள். 50 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று வேலையின்மை தலைவிரித்தாடுகிறது.

நீங்கள் Make in Indiaவை பற்றி பேசுகிறீர்கள். Startup இந்தியாவைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நம்முடைய இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. உள்ளதும் காணாமல் போய்விட்டது. இது உண்மை. இந்த உண்மையை நீங்களும் அறிவீர்கள். ஏனென்றால் நீங்களும் உங்களது உரைகளில் வேலையின்மை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கினீர்கள்? எப்படி உருவாக்கினார்கள்? என்பதை பற்றி நீங்கள் பேசவே இல்லை. உங்களால் பேச முடியாது. ஏனென்றால் நீங்கள் ஒருவேளை பேசினால் இந்திய இளைஞர்கள் இவர்கள் நம்மை கேலி செய்கிறார்கள் என்று கூறுவார்கள்.

கல்வித்துறையில் மாநில உரிமையை நிலைநிறுத்த வேண்டும் – 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்த நிலைமை எப்படி வந்தது? இரண்டு இந்தியாக்கள் எப்படி பிறந்தன? சிறுகுறு தொழில்களும், முறைசாரா தொழில்களிலும்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அவர்களிடமிருந்து இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை பிடுங்கி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறீர்கள். கடந்த ஏழு ஆண்டுகளில், சிறுகுறு தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில்களில் மீது ஒவ்வொன்றாக, ஒன்றன்பின் ஒன்றாக நீங்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறீர்கள்.

இடையில் குறுக்கிட்ட உறுப்பினர் எத்தனை ஆண்டுகள் பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்க ஏழு ஆண்டுகளை பற்றி பேசுகிறேன்

என்னுடைய உரையின் இறுதியில் உங்களுடைய மனத்திருப்திக்காக 60 ஆண்டுகள் குறித்தும் பேசுவேன் கவலைப்படாதீர்கள், பொறுத்திருங்கள் என்றார்.

முறைசாரா தொழில்களில் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி என்று தாக்குதல் நடத்தியது மட்டுமில்லாமல், கொரோனா காலகட்டத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஆதரவையும் நீங்கள் வழங்கவில்லை. அதன் விளைவாக, இந்தியாவின் 84 விழுக்காடு மக்களின் வருமானம் குறைந்து இருக்கிறது. அவர்கள் மிக விரைவாக வறுமையில் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் 60 ஆண்டை பற்றி கேட்டீர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமானது தனது பத்தாண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது.

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்த ஒன்றிய அரசு – மாநில உரிமைகளில் தலையிடுவதாக பஞ்சாப், மே.வங்க அரசுகள் குற்றச்சாட்டு

பாஜகவினர் இடையில் தலையிட ராகுல்காந்தி இது எங்களுடைய தரவுகள் இல்லை என்று வலியுறுத்தி கூறிய பின் மீண்டும் தன்னுடைய உரையை தொடர்ந்தார்.

நீங்கள் சிரித்துக் கொள்ளுங்கள் இது எங்களுடைய தரவு இல்லை உண்மையான தரவு. ஆனால் நீங்கள் மீண்டும் இருபத்தி மூன்று கோடி பேரை வறுமையிலேயே தள்ளி விட்டீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், முறைப்படுத்தப்பட்ட தொழில்களில் ஏகபோகம் தலைவிரித்தாடுகிறது. எந்தத் துறையையும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரையும் விட பெரிய ஏகபோகவாதிகளை குறித்து கண்டிப்பாக கூறுவேன்.

கொரானாவின் சமயத்தில் பல்வேறு வகையான திரிபுகள் வந்ததைப் போல, அவர்கள் Double A Variantகள். அந்த வைரஸ் இந்தியாவின் பொருளாதாரத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவிக்கொண்டிருக்கிறது.

நீங்கள் கேள்வி எழுப்பியதால் முதலில் அதைப் பற்றி பேசி விடுகிறேன். ஒரு மனிதனுக்கு இந்தியாவின் அனைத்து துறைமுகங்கள், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்கள், ஆற்றல், டிரான்ஸ்மிசன், சுரங்கங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(green energy), கேஸ் விநியோகம், சமையல் எண்ணெய், இந்தியாவில் என்ன நடந்தாலும் அங்கே அதானி தென்படுகிறார்.

இன்னொருபுறம் அம்பானி அவர்கள், பெட்ரோகெமிக்கல், தொலைத்தொடர்பு, சில்லரை வர்த்தகம், இணைய வணிகம் என அவர் பல்வேறு இடங்களில் அவரின் ஏகபோகம். ஆக ஒட்டு மொத்த செல்வமும் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு போகிறது.

டெல்லி மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் மசோதா – கேஜ்ரிவால் தலைமையில் இன்று போராட்டம்

முறைசாரா தொழில்களை நஷ்டப்படுத்தி விட்டீர்கள், சேதப் படுத்தி விட்டீர்கள். ஒருவேளை முறைசாரா தொழில்களை அழித்து, உற்பத்தி துறைசார் வேலை வாய்ப்புகளைப் பெருக்கியிருந்தால்,  இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது,  இரண்டு இந்தியாக்களும் உருவாகி இருக்காது. ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள் முறைசாரா தொழில்களில் அழித்து விட்டீர்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என திணித்து….அனைத்து சிறு குறு தொழில்களை மூடி விட்டீர்கள்.ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு உதவி செய்திருந்தால், உற்பத்தித்துறை தயாராகியிருக்கும்.

யார் உங்களுக்காக உற்பத்தித் துறையை கட்டி எழுப்பி இருக்க முடியுமோ அவர்களை நீங்கள் அழித்து விட்டீர்கள். நீங்கள் இன்று Make in India, Make in India  என்று கூறி வருகிறீர்கள் Make in India என்பது நடக்கவே செய்யாது. ஏனென்றால், சிறுகுறு தொழில்களை நடத்துபவர்கள்தான் இந்தியாவின் தயாரிப்பவர்கள், அவர்களை நீங்கள் முழுமையாக அழித்து விட்டீர்கள். முறைசாரா தொழிலாளர்கள்தான் இந்தியாவில் தயாரிப்பவர்கள் அவர்களை நீங்கள் அழித்து விட்டீர்கள். Make in India என்ற முழக்கத்தை உண்மையாக ஆக்குவதற்கு சிறு குறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்.

என்னிடம் தரவுகள் இருக்கின்றன. உற்பத்தித் துறையில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 46 விழுக்காடு குறைந்து இருக்கிறது. ஆனால், நீங்கள் ஐந்து அல்லது பத்து பேரிடம் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். எனக்கு பெரிய தொழிற்சாலைகளோடு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், வேலைவாய்ப்புகள் பெருக்க வேண்டுமென்றால், சிறுகுறு தொழில்கள் தான் அதை உங்களுக்கு செய்து தர முடியும். இதுதான் உண்மை. இரண்டு இந்தியாக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன ஆனால் நீங்கள் இங்கே வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

புதிய இந்துஸ்தான், புதிய இந்தியா, மேக் இன் இந்தியா இன்னும் என்ன ஸ்டார்ட் அப் இந்தியா.. இப்படி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், பேசியபடியே இருக்கிறீர்கள். ஆனால் நாட்டில் வேலையின்மை மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிற ஏழை இந்தியா அமைதியாக வேடிக்கை பார்க்கும் என்று கருதாதீர்கள். அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். இந்த இந்தியாவுக்கு எல்லாம் வெளிப்படையாக தெரிகிறது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

’தமிழகத்தில் என்ஐஏ கிளை – மாநில உரிமைக்கு எதிரானது’: அ.மார்க்ஸ்

இந்த இந்தியாவுக்கு, உங்கள் தரவுகளிலிருந்துதான் சொல்கிறேன் கேளுங்கள், இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் இடம், 55 கோடி மக்களிடம் இருக்கும் சொத்தை விட கூடுதலாக சொத்து இருக்கிறது. வெறும் பத்து பேரிடம் 40 விழுக்காடு இந்தியர்களை விட கூடுதலாக சொத்து இருக்கிறது. இது எப்படி நடந்தது எல்லாம் நீங்கள் செய்த கைங்கரியம். நரேந்திரமோடியின் கைங்கரியம். பிரதமருக்கும், உங்களுக்கும் நான் ஒரு ஆலோசனை கூறுகிறேன், இந்த இரண்டு இந்தியாவை இணைக்கும் பணியை மிக வேகமாக செய்யத் தொடங்குங்கள். சிறு குறு தொழில்களுக்கு உதவி செய்யுங்கள், நம்முடைய வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி செய்ய தொடங்குங்கள்.

உங்களுக்கு மார்க்கெட்டிங் செய்கிறார்கள், முகநூல், வாட்ஸ் அப்பில் உங்களைக் கொண்டுபோய் சேர்க்கிறார்கள் என்பதற்காக, மொத்த வளத்தையும் இவர்கள் இந்த பணக்காரர்களிடம் ஒப்படைப்பதை உடனடியாக நிறுத்துங்கள். இல்லையென்றால், நாட்டிற்கு தான் நஷ்டம் உங்களுக்கு நஷ்டம் வராது நாட்டுக்கு தான் நஷ்டம் வரும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்