Aran Sei

பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் ‘பசுவைக் காப்பாற்றுங்கள்’ யாத்திரை – கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு

Image Credits: The Print

த்தர பிரதேசத்தின் புண்டேல் கண்ட் பகுதியில் நடைபெறவுள்ள ‘பசுவைக் காப்பாற்றுங்கள்’, ‘விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்’ பாதயாத்திரைகள், மூவர்ண யாத்திரைகள் மற்றும் தேசியக் கொடியுடன் ஒரு செல்ஃபி எடுக்கும் இனைய வழி பிரச்சாரம் போன்றவற்றை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் பாஜகவின் அரசியலுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் பிரச்சினைகளில் தலையிட காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 135 ஆண்டுகள் முடிவு பெறுவதைத் தொடர்ந்து, டிசம்பர்-28ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில பிரிவுகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மூவர்ண யாத்திரைகள் மற்றும் இது போன்ற பிற புதுமையான பிரச்சாரங்களும் தேவையான சமூக இடைவெளி நெறிமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக காலவரையின்றி போராட்டத்தில் அமர்ந்திருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குமாறும் நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

விவசாய சட்டங்களை திரும்ப பெற குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் மனு – தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி

அடுத்த ஆண்டு, இந்திய-பாகிஸ்தான் போரின் 50 வது ஆண்டு விழா அனுசரிக்கப்படும். அப்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் “இரும்புத் தலைமையை” குறித்துப் பறைசாற்றக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவரது தலைமை பாகிஸ்தான் இராணுவத்தைச் சரணடைய கட்டாயப்படுத்தியது மற்றும் பங்களாதேஷை உருவாக்க வழிவகுத்தது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், போர் வெற்றியை நினைவுகூரும் விதமாக டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் கொண்டாட படுகிறது. இந்த ஆண்டு, டிசம்பர் 16 அன்று, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “அப்போது, இந்தியாவின் அண்டை நாடுகள் பிராந்திய இறையாண்மையையும், பிரதமர் அலுவலகத்தின் வலிமையையும் மதித்தன” என்று கூறியுள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

காங்கிரஸ் பொதுச் செயலாளர், பிரியங்கா காந்தியும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் தாய் பசுவின் நிலை பரிதாபமாக உள்ளது என்று கருத்துத் தெரிவித்து வருகிறார்.

பாஜகவை வீழ்த்துவதற்காகக் காங்கிரஸ் இது போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. ஆனால் இதற்குச் சில கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “பாஜகவின் உத்தியைப் பயன்படுத்தி அவர்களை நம்மால் தோற்கடிக்க முடியாது. மாறாக, மதச்சார்பின்மையை மீண்டும் வலியுறுத்துவது உள்ளிட்ட நமது முக்கிய பலங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்