Aran Sei

‘வானளவு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை’ – நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்

யர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி  திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதல தெரிவித்துள்ளார்.

இன்று (பிப்பிரவரி 12), கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள சட்டசபையின் எதிர்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதல செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

அதில், “பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால், அதைக் கண்டித்து அகில இந்திய அளவிலான போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சி நடத்தும்.” என்று அவர் அறிவித்துள்ளார்.

‘ பெட்ரோல், டீசல் விற்பனையில் கொள்ளை அடிக்கும் மத்திய அரசு, ரூ 38-க்கு பெட்ரோல் வேண்டும் ’ – கே.எஸ்.அழகிரி

“கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. அதன் பலனை மக்களுக்கு அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்று எல்பிஜி எரிவாயுவின் விலையைக் குறைக்கலாம். ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசும், கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசும் அப்படி செய்யாமல், தங்களுக்கு லாபம் ஈட்டும் வேலையைச் செய்கின்றன.” என்று ரமேஷ் சென்னிதல குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், மானிய விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .71.41 மற்றும் டீசல் ரூ .55.49 என விற்கப்பட்டது. இப்போது, ​​கச்சா எண்ணெய் விலை, அப்போதிருந்ததை விடப் பாதிக்கும் குறைவாகவுள்ளது. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வானளவு உயர்த்தியுள்ளது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

 

புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை – மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பைக் குறைக்க கேரளா ஆளும் அரசான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வர வேண்டும் என்று ரமேஷ் சென்னிதல கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலத்திற்கு மாநிலம் அதன் உள்ளூரூர் வரிகைகளை பொறுத்து எரிபொருள் விலை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்