Aran Sei

எல்ஐசி தனது நிதியை பிஎம் கேர்ஸுக்கு வழங்கியது ஏன்? – நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி

கொரோனா பொதுமுடக்க காலத்தில் எல்ஐசி தனது நிதியை பிஎம் கேர்ஸுக்கு வழங்கியது ஏன் என்று காங்கிரஸ் உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில், மார்ச் மாதம் கொரோனா நோய்தொற்று பரவத் தொடங்கியபோது, பிரதமர் நரேந்திர மோடி பி.எம் கேர்ஸ் நிதியை அறிமுகப்படுத்தினார். கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்ய, மக்கள் இத்திட்டத்தின் வழியே பணம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிஎம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை – முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

இந்நிலையில், நேற்று (மார்ச் 15), நாடாளுமன்றத்தில் ரவ்னீத் சிங் பிட்டு, பிஎம் கேர்ஸ் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது,  “கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆனால், அவர்கள் பெற வேண்டிய நிவாரணங்களை பெறவில்லை. மறுபுறம், அரசு பொது நிறுவனமான எல்ஐசி தனது நிதியை பிஎம் கேர்ஸுக்கு மட்டுமே வழங்கியது. இது ஏன்? ” அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்