Aran Sei

‘கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?’- ஜோதிமணி எம்.பி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ளிருப்பு போராட்டம்

ரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை தொடங்கியுள்ளார்.

இன்று(நவம்பர் 25), ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த ட்வீட்டில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில, “ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார். கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?” என்று கேள்விகளை ஜோதிமணி அடுக்கியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்