Aran Sei

அசாம் மாநிலத்தில் பாஜக முழுப்பக்க தேர்தல் விளம்பரம் – தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

ட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என அசாம் தினசரிகளில் பாஜக வழங்கியுள்ள முழுப்பக்க விளம்பரம், தேர்தல் விதிமுறை மீறல் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அசாம் முதல்வர் சர்பநந்த் சோனோகால், பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

முதல் பக்க விளம்பரங்கள் தலைப்புச் செய்தி போன்று “உருமாற்றம்” செய்யப்பட்டு  வெளியிட்டப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுகிறது என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

காங்கிரஸ் தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மாக்கன், முகுல் ஸ்னிக் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களுக்காக பாஜக உயர் தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்பநந்த சோனோகால், ஜே.பி.நட்டா, ரஞ்சித் குமார் தாஸ் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட சட்டங்களில் வழக்குப் பதிவு செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை வேண்டிக் கொள்கிறோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

இது போன்ற விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Source : Times of India

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்