Aran Sei

‘நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் மெகா பேரணி’ – பிரியங்கா காந்தி திட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் மெகா பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் மேற்கொண்ட முன்னெடுப்புக்கு நிகராக பெரிய அளவில் இந்த போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்டமிடலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொண்டு வருகிறார்.

மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்குக – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மத்திய அரசின் பணவீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இரண்டு வாரகாலம் ஜன ஜாக்ரன் அபியான் என்ற பெயரில் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று வருகிறார்.

பேரணியை திட்டமிடுவதற்காக முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்துள்ளார். அதில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால்,  சச்சின் பைலட் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திரிபுரா வன்முறை: கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு

இந்த பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. அனுமதி கிடைக்காவிட்டால், துவாரகா மைதானத்திற்கு பெரிய பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்