Aran Sei

காங்கிரஸை பலப்படுத்த திட்டம் – புதிய தலைவர் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கட்சியினர் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 27), நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் ஆளும் இரு மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்துக்கொண்டு, தங்களின் தரப்பு கருத்துக்களை முன்வைத்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

‘பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை மம்தா பானர்ஜி மார்ச் மாதம் சந்திக்கவுள்ளார்’- திரிணாமூல் காங்கிரஸ்

இந்தக் கூட்டத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்து வரும் சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் கட்சியின் உள்கட்சித் தேர்தல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் இறுதியில் கட்சியின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைகால தேசியத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வருகிறார்.

மின் திட்டங்களுக்காக ராஜஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களுக்கு சத்தீஸ்கரின் பூபேஷ் பாகேல் அரசாங்கம் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி, ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையை நாடியதைத் தொடர்ந்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமாக்கப்படாத கிரிப்டோ கரன்சிக்கு வரி எதற்கு? – காங்கிரஸ் கேள்வி

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா மற்றும் பஸ்தார் பகுதிகளில் உள்ள பழங்குடியின பகுதிகளில், இந்த நிலக்கரி சுரங்கங்கள் வருகின்றன என்று பூபேஷ் பாகேல் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைகாலத் தலைவர் சோனியா காந்திக்கு அசோக் கெலாட் கடந்த ஆண்டு கடிதம் எழுதி, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்