Aran Sei

அசாம் மக்கள் மீதான காவல்துறையின் துப்பாக்கி சூடு: நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க கபில் சிபல் கோரிக்கை

Image Credits: DNA India

சாமில் பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் விவகாரத்தை, நீதிமன்றம் தானாக முன்வந்து கையில் எடுத்து, விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கோரியுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் தேதி, அசாம் மாநிலம் தர்ராங் மாவட்டம் சிபஜ்கார் பகுதியில் வாழ்பவர்களை அம்மாநில அரசு வெளியேற்றுவதற்கு எதிராகப் போராடிய மக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மாநில அரசின் விவசாயத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – காவல்துறையோடு இணைந்து மக்களை தாக்கிய புகைப்பட கலைஞர் கைது

மேலும், நூற்றுக்கணக்கானக் காவல்துறையினர் மரங்களுக்குப் பின்  ஒளிந்து கொண்டு, பல்வேறு திசைகளில் துப்பாக்கி சூடு நடத்தியது குறித்த காணொளியும் சமுகவலைதளங்களில் பரவியது.

காவல்துறையின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். மேலும், காவல்துறையினர் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

மேலும்,  இந்தச் சம்பவத்தைப் படம் பிடிக்க மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்  பிஜய் சங்கர் பனியாவும்  காவல்துறையோடு இணைந்து சுடப்பட்ட ஒருவரை தாக்கினார்.

அசாம் மாநில பாஜக அரசு சாலைகளை முடக்கியுள்ளாதால், மருந்துகளின்றி கொரோனா நோயாளிகள் மரணம் : மிசோராம் பாஜக அரசு குற்றச்சாட்டு

இந்நிலையில், இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள கபில் சிபல், “அசாமில் நிலத்தில் இருந்து வெளியேற மறுத்தவர்களுக்கு எதிராக நடத்தபட்ட மிருக்கத்தமான தாக்குதல்களில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வழியாக பார்த்தேன். அப்படங்கள் என்னை உலுக்கிவிட்டன. நம்முடைய அரசின் மௌனம் என்னை வருத்தம் கொள்ள செய்கிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “விசாரணை என்பதுமட்டும் தீர்வில்லை. நீதிமன்றம் தானாக முன்வந்து இவ்விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.” என்று அவர் கோரியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்