மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது குறித்து மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (மே 3), தனது டிவிட்டர் பக்கத்தில், “மேற்கு வங்கத்தில் ஆணவம், வலிமை, பண பலம், ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துதல், பிரிவினைவாத அரசியல் மற்றும் தேர்தல் ஆணையம் போன்றவை தோல்வியுற்றுள்ளன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
In West Bengal
Who lost :Arrogance
Might
Money power
Using Jai Shri Ram for politics
Divisive agenda
&
The Election CommissionShe stood up to them
&
WON— Kapil Sibal (@KapilSibal) May 3, 2021
மேலும், “இவை எல்லாவற்றுக்கும் எதிராக நின்ற அவர் (மம்தா பானர்ஜி) வெற்றி பெற்றுள்ளார்” என்று கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் (292-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது), 210 இடங்களில் வெற்றியையும் 3 இடங்களில் முன்னிலையையும் திரிணாமூல் காங்கிரஸ் பெற்றுள்ளது . பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.