Aran Sei

‘மம்தா பானர்ஜி இன்று நம் நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார்’ – காங்கிரஸ் தலைவர் கமல் நாத்

மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள் உள்ளிட்ட தனது எதிரிகளை தோற்கடித்து தேசியத் தலைவராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருவெடுத்துள்ளார் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல் நாத் வர்ணித்துள்ளார்.

நேற்று (மே 5), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அவர்,  “மம்தா பானர்ஜி இன்று நம் நாட்டின் தலைவராக மாறியுள்ளார். அவர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராகியுள்ளார். கடுமையான போராட்டத்திற்குப் பின் இந்த சட்டபேரவைத் தேர்தலில் இவ்வெற்றியை பெற்று, இந்த இடத்திற்கு வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், மத்திய புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் நிறுவனங்களை எதிர்த்து சண்டை செய்ய வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் அவர் எட்டி உதைத்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என முழங்கும் பாஜக ஏன் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்கவில்லை? – மம்தா பானர்ஜி கேள்வி

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி முன்னிறுத்தப்படுவாரா என்று கேள்விக்கு,  “எங்களுக்கு இதுகுறித்து இப்போது எதுவும் தெரியாது. இதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் முடிவு செய்யும்.” என்று கமல்நாத் பதிலளித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்