Aran Sei

சி.பி.ஐ புதிய இயக்குநரை  தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளது- தேர்வுக்குழு உறுப்பினர் அதிர் சௌதிரி குற்றச்சாட்டு

த்திய புலனாய்வுத் துறைக்கு புதிய இயக்குநரை  தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த  தேர்வுகுழு உறுப்பினர் அதிர் ரஞ்சன் சௌத்திரி குற்றம் சாட்டியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டியதால் அரசு பரிந்துரைத்த இரண்டு நபர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா : அமலாக்கத்துறை அலுவலகத்தில் “பாஜக மாநில அலுவலகம்” என்று பதாகை வைப்பு

மத்திய புலனாய்வுத் துறைக்கு புதிய இயக்குநரை தேர்ந்தெடுக்கும் மூவர் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த அதிர் ரஞ்சன் சௌத்திரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா,”பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு குறைவாக உள்ளவர்களை காவல்துறை உயர்பொறுப்புகளுக்கு நியமிக்கக்கூடாது” என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டியதால் இருவர்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

‘அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படும் மேற்குவங்க ஆளுநர்’ – சிவசேனா குற்றச்சாட்டு

மேலும்,இந்த உத்தரவை ஏற்று புதிய இயக்குநரை தேர்ந்தெடுக்கும் குழுவானது செயல்படவேண்டும் என என்.வி.ரமணா  கூறியுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த அதிர் ரஞ்சன் சௌத்திரி, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் இந்தக் கருத்தை வழிமொழிந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாரதா ஊழல் வழக்கு:  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 4 பேரை கைது செய்த சி.பி.ஐ

மேலும் இந்த குழுவின் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த ரஞ்சன் சௌத்திரி, “நான் கடந்த மே 11 அன்று 109 பெயர்களை அரசுக்கு பரிந்துரைத்தேன்.ஆனால் அது இன்று       (மே 23) பிற்பகல்  1 மணிவாக்கில் 10 பேராக குறைக்கப்பட்டது, இந்நிலையில் அது மேலும் குறைக்கப்பட்டு அந்த பட்டியலில் தற்போது 6 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அரசின் இந்த  அணுகுமுறை என்பது மிகுந்த ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்