Aran Sei

‘கட்சி தாவல்கள் அரசியலில் சாதாரணம்’ – பாஜகவுக்கு மாறி ஆட்சியை கவிழ்த்த எம்.எல்.ஏக்களுக்கு அழைப்புவிடுக்கும் கர்நாடக காங்கிரஸ்

தசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து பாஜகவுக்கு சென்ற 17 சட்டபேரவை உறுப்பினர்களை மீண்டும் காங்கிரஸில் சேரும்படி அழைத்த கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், அரசியலில் கட்சி மாறுவதும் ஏமாற்றுவதும் பொதுவான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 3), செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மோசடி என்பது அரசியலில் நடக்கும் ஒரு பொதுவான நிகழ்வுதான். டி.கே.சிவகுமாரோ காங்கிரஸ்ஸோ மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துக்காட்ட இருக்கும். நாங்கள் பிரதாப் கவுடா பாட்டீலை பாஜகவிலிருந்து கொண்டு வந்தோம். ஆகவே, வேறு அரசியல் கட்சிக்குச் சென்று திரும்புவது அரசியலில் சாதாரணமானதுதான்.” என்று கூறியுள்ளார்.

தொடரும் உத்தரகண்ட முதல்வர்களின் ராஜினாமா: சட்டறிவு இல்லாததால் 5 ஆண்டுகளில் மூன்று முதல்வர்களை பாஜக மாற்றியதாக காங்கிரஸ் விமர்சனம்

பாஜகவுக்கு கட்சி மாறி மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்த 17 சட்டபேரவை உறுப்பினர்கள் மட்டுமல்ல, எங்கள் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்க விரும்பும் எவரும் கட்சியில் சேர வரவேற்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட டி.கே.சிவகுமார், “அவர்கள் வீரபத்ரப்பா தலைமையிலான குழுவுக்கு விண்ணப்பிக்கலாம். யாருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும், யாருடையது பரிசீலிக்கப்படாது என்பதை அவர் பார்த்துக்கொள்வார். கட்சி உறுப்பினர்கள், மாவட்ட தலைமை ஆகியவற்றின் கருத்துகள் பெறப்பட்டு, மாநில தலைமைக்கு அனுப்பப்படும். அவர்கள் இறுதி முடிவெடுப்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Source; ani

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்