Aran Sei

போபாலில் ‘பண்டிட் இனப்படுகொலை அருங்காட்சியகம்’ – பாஜகவின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

த்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ‘இனப்படுகொலை அருங்காட்சியகம்’ அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘இனப்படுகொலை அருங்காட்சியகம்’ நிலம் வழங்குவதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்திருந்தார்.

“காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்களின் வலியையும் துன்பங்களையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் காட்டுகிறது. மத்தியப் பிரதேசத்தில் ‘இனப்படுகொலை அருங்காட்சியகம்’ அமைப்பதற்கு மத்தியப் பிரதேச மாநில அரசு நிலம் அளிக்கும். தேவையான உதவிகளைச் செய்யும்” என்று நேற்று (மார்ச் 25) விவேக் அக்னிஹோத்ரியிடம் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார்.

போபால் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி – காங்கிரஸ் கண்டனம்

இது குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திக்விஜய சிங், “போபாலில் இனப்படுகொலை அருங்காட்சியகம் அமைப்பதை முற்றிலும் எதிர்கிறேன். போபாலின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க விடமாட்டேன். அருங்காட்சியகம் அமைக்கும் முடிவை எதிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 25), போபாலில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பங்கேற்றுள்ளனர். அப்போது, மரக்கன்றுகள் நடப்பட்டன.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்