Aran Sei

கொரோனாவுக்கு அயல்நாடுகள் வழங்கும் நிதி – மத்திய அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வலியுறுத்தும் காங்கிரஸ்

கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள உதவிகள்குறித்து அரசு தெரிவிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள உபகரணங்களை மாநில அரசுகளுக்குப் பங்கிட்டு அளிப்பதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படவேண்டுமெனவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், குஜராத் மாநிலத்தில் மட்டும் மே 1 அன்று தொடங்கப்பட்ட 18 முதல் 44 வயது வரைவுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திட்டத்தில் அதிகப்படியான கொரோனா தடுப்பூசிகள் எவ்வாறு செலுத்தப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகளுக்குத் தடுப்பூசி வழங்குவதில் உள்ள மத்திய அரசின் நிலைப்பாடுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “கடந்த மே 2 அன்று குஜராத்தில் மட்டும் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 60 விழுக்காடு பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது எப்படி?  மேலும், 11 மாநிலங்களில் மட்டும் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடிந்தது எவ்வாறு?” என்று ஜெயராம் ரமேஷ் தொடர்ச்சியான கேள்விகளை முன்வைத்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 51,622 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், ஆனால் பெரிய மாநிலங்களான மகாராஷ்டிரா 12,525 பேருக்கும் மற்றும் உத்தரபிரதேசத்தில் 15,792 பேருக்கும்  மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஜெயராம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகள்குறித்து கூறிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, “எல்லோரும் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வரும்நிலையில், மத்திய அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும். நேர்மையும், வெளிப்டைத்தன்மையும் தான் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான முதல் படி” என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்