Aran Sei

தடுப்பூசி கொள்கை குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – வலியுறுத்தும் காங்கிரஸ்

ன்றிய அரசின் தடுப்பூசி கொள்கை தடுப்பூசி கொள்கைகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தல் மூலமே, மூன்றாவது அலையைத் தடுக்க முடியும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

காணோளி வாயிலாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா, ”கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, சுகாதார உள்கட்டமைப்பு பற்றாக்குறை, மாநில அரசுகளுடன் இணைந்து மருத்துவ வசதிகளை அதிகரிப்பது, கிராமபுற மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்துவது” குறித்து ஒன்றிய அரசுக்கு அறிவுருத்தியுள்ளார்.

கொரோனாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை – பிரதமர் மோடிக்கு ஆட்சிப் பணி முன்னாள் அலுவலர்கள் கடிதம்

”இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை, அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அரசு எடுத்திருக்கும் முயற்சி ஆகியன குறித்து தெளிவுபடுத்தும் வகையில், தடுப்பூசி கொள்கைகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என ராஜீவ் சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

“இது பிம்ப கட்டமைப்பிற்கான காலம் அல்ல, பிம்ப கட்டமைப்புகுறித்து கவலை கொள்ளாமல், மக்கள் உயிரைக் காப்பாற்றுங்கள். பிம்ப கட்டமைப்பை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் புறந்தள்ளிவிட்டு, அனைத்து ஆற்றலையும் ஒன்று சேர்த்து கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட முயற்சியுங்கள்” என கூறியுள்ளார்.

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

”கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க தினசரி 90 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, பணம் இருப்பவர்கள் தடுப்பூசிகள் செலுத்துக் கொள்ள உதவும் வகையில், தடுப்பூசிகள் வெளி சந்தைகளில் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராஜீவ் சுக்லா ஆலோசனை வழங்கியுள்ளார்.

”கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவில்லை என்றால் மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது. போர்கால அடிப்படையில், தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒன்றிய அரசையும் பிரதமரையும் நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

”கிராமபுறங்களில் போதுமான பரிசோதனை வசதிகள், மருத்துவமனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், கிராமபுறங்களில் கொரோனா அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது” என ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்