Aran Sei

லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு – ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்

Image Credits: DNA India

த்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் அவரது இரு உதவியாளர்களும், மத்திய மகளிர் ஆணையத்தில் தன்னை உறுப்பினராக்க ரூ.1 கோடியை லஞ்சமாகக் கேட்டதாக, சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை ரித்திகா சிங், வழக்கு தொடர்ந்துள்ளார். இதை தொடர்ந்து, ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என்றும் “நீதி விசாரணைக்கு” உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை நிர்வகிக்கும் ஸ்மிருதி இரணிக்கு நெருக்கமான இரு உதவியாளர்களும், ரூ.1 கோடி லஞ்சம் கேட்டதாக கடந்த வாரம் ரித்திகா சிங் குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை, ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதன் பின்னர் வழக்கு எந்த அதிகார வரம்பிற்குள் வரும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்று ரித்திகா சிங்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

“ஸ்மிருதி ஜி, நீங்கள் ஏன் உங்கள் ராஜினாமாவை வழங்கிய பின்னர், பக்கச்சார்பற்ற விசாரணைக்கு முன்வரக்கூடாது? பிரதமர் ஏன் அவரது ராஜினாமாவைப் பெற்ற பிறகு, ஒரு சார்பற்ற நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது?” என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும் உண்மையை அறிய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். “நாட்டின் மத்திய அமைச்சர் மீது, மிகக் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண நபர் அளித்த குற்றசாட்டு இல்லை. நாட்டிலேயே மிகவும் கொண்டாடப்பட்ட ஒருவர் அளித்துள்ள குற்றசாட்டு” எனவும் ரன்தீப் சுர்ஜேவாலா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்