Aran Sei

பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – காங்கிரஸ் எதிர்ப்பு

ண்டிகரில் உள்ள பஞ்சாப் மாநில ஆளுநர் மாளிகையிலும் (ராஜ் பவன்) ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் உள்ள பூங்காவிலும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

நேற்று முன்தினம் (மார்ச் 20), பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் உள்ள குருநானக் கலையரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்காக மட்டும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் திரையிடப்பட்டுள்ளது.

இச்செயலானது ஆளுநர் அலுவலகத்தின் கண்ணியத்தைக் குறைத்துவிட்டதாக சண்டிகர் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

இதுகுறித்து பேசியுள்ள சண்டிகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சாவ்லா, ​​“1990ஆம் ஆண்டு பாஜக ஆதரவுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சி அல்லாத ஆட்சியின்போதுதான் காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றம் நடந்தது என்ற உண்மையை இத்திரைப்படம் வசதியாக மறைக்கிறது. நாட்டை பிளவுபடுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் செயல்திட்டத்தையே  இத்திரைப்படம் பரப்புரை செய்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் உள்ள ஒரு பூங்காவில் உள்ளூரைச் சேர்ந்த அமைப்பு ஒன்றால் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் திறந்த வெளியில் திரையிடப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை; வரலாற்றைத் திரித்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – சரத் பவார்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திறந்த வெளியில் திரையிடக்கூடாது என்று அத்திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கண்டித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்