Aran Sei

‘கோவிஷீல்டின் விலையை நியாயப்படுத்தியவர்கள் கோவாக்சின் விலையையும் நியாப்படுத்துவார்களா?’ – ப.சிதம்பரம் கேள்வி

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் விலையை நியாயப்படுத்தியவர்கள் இன்று அறிவிக்கப்பட்ட கோவாக்சின் விலையையும் நியாயப்படுத்துவார்களா என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 24) இரவு, தனது ட்விட்டர் பக்கத்தில், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.400-க்கும் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுவதை நியாயப்படுத்தியவர்கள் இன்று அறிவிக்கப்பட்ட கோவாக்சின் விலையான ரூ.600-ஐயும் ரூ.1200-ஐயும் நியாயப்படுத்துவார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “உதவி செய்வாறின்றி அரசு செயலிழந்து நிற்கிறது. ஆனால், மறுபுறம், இரண்டு மருந்து உற்பத்தியாளர்களின் அப்பட்டமான லாபத்தையும் சுரண்டலையும் அமைதியாக ஆதரிக்கிறது. ஏன் கட்டாய உரிமம் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.” என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்