Aran Sei

அசாமில் வேட்பாளர் கட்சி மாறிய விவகாரம் – தமுல்பூரில் தேர்தலை தள்ளிவைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

போடோலாந்து மக்கள் முன்னணியின் தமுல்பூர் வேட்பாளர், பாஜகவில் இணைந்ததை அடுத்து, அந்தத் தொகுதியில் வாக்குப்பதிவை ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் அக்கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.

அசாம் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான 3 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமுல்பூர் தொகுதியில் போடோலாந்து மக்கள் முன்னணியில் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ரங்ஜா குங்கூர் பாசுமதாரி பாஜகவில் இணைந்துள்ளார்.

இதனால், தமுல்பூர் தொகுதிக்கான வாக்குபதிவை ஒத்திவைக்குமாறு, போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் ஹகிராமா மொஹிலாரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாஜகவில் இணைந்த போடோலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர் – வேட்பாளரை மாற்ற அனுமதிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

முன்னதாக, வேட்பாளரை மாற்ற அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அந்தக் கட்சி கோரிக்கை வைத்திருந்தது.

இது தொடர்பாக  ஹகிராமா மொஹிலாரி தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், “எனது கட்சியின் சார்பாக  நியமிக்கப்பட்ட வேட்பாளர் லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத தூண்டல்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் விசுவாசத்தை மாற்றிக் கொண்டிருப்பதால், போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) கட்சியின் சின்னத்தின் கீழ் வாக்குகளைப் பெற அவருக்கு இனி உரிமை இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

59.5 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் – அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

மேலும், அந்தக் கடிதத்தில், வேட்புமனுவை வாபஸ் பெறும் கடைசி தேதிக்குப் பிறகு பாசுமதாரி கட்சி மாறியிருப்பது, ’தேர்தல்களில் நேர்மையின் அடிப்படை தேவையை’ மீறும் ’மோசடிநடவடிக்கை’ எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்