Aran Sei

அஸ்ஸாமில் பாஜகவிற்கு பயந்து பதுக்கப்படும் வேட்பாளர்கள் – குதிரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

சாம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்கவைக்கப்படவுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளர் என என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

அசாம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த சுமார் 9 வேட்பாளர்களை பாஜக விலை பேசக்கூடும் என்பதால், அவர்கள் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்த போடோலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர் – வேட்பாளரை மாற்ற அனுமதிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போடோலாந்து மக்கள் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இடப்பெற்றுள்ளன.

இந்நிலையில், போடோலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த ஒரு வேட்பாளர் பாஜகவில் இணைந்ததை அடுத்து, தற்போது வேட்பாளர்களை பத்திரப்படுத்தும் வேளையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

அசாமில் வேட்பாளர் கட்சி மாறிய விவகாரம் – தமுல்பூரில் தேர்தலை தள்ளிவைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் பாஜக, வேட்பாளர்களை விலை பேசக்கூடும் என்பதால் சில காங்கிரஸ் வேட்பாளர்களும், போடோலாந்து மக்கள் முன்னணியின் வேட்பாளர்களும் சத்தீஸ்கர் மாநிலம் தலைநகர் ராய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளதாக  என்.டி.டி.வி   செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

இவர்கள் வரும் மே 2 ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, ராய்ப்பூரிலேயே தங்க வைக்கப்படவுள்ளதாக, காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்