Aran Sei

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி குறைப்பு – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம்

காத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான (ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்) நிதி குறைக்கப்பட்டிருப்பதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது பேசிய அவர், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களின் கணக்குகளில் ரூ 5 ஆயிரம் கோடி வரை கழித்தல் இருப்பு (negative balance or minus balance) உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிப்பது தாமதமாகும்” என தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

கொரோனா தொற்றின்போது விளிம்புநிலை மக்களுக்கு உதவுவதற்காக 15 நாட்களுக்குள் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

”சிலரால் கேலி செய்யப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கொரோனா தொற்றின்போது கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களுக்குச் சரியான நேரத்தில் உதவி செய்யவும், அரசாங்கத்திற்கு நல்ல பெயர் வாங்குவதற்கு பயனுள்ளதாகவும் இருந்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவின் வகுப்புவாத சம்பவங்களால் மாநிலத்தின் மதிப்பு குறைகிறது – பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்- ஷா கவலை

”இருப்பினும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும்  நிதி குறைந்து உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 35 விழுக்காடு நிதி குறைக்கப்பட்டுள்ளது. வேலையின்மை அதிகரித்து வரும் இந்த காலத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி இந்த விவகாரத்தைச் அரசியலாக்குவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சோனியாவின் கருத்து உண்மைக்கு வெகுதொலைவில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

”எழுப்பப்பட்ட பிரச்னை உண்மைக்கு வெகுதொலைவில் உள்ளது. 2013-14 நிதியாண்டில் மகாம்தா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ 33 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், நரேந்திர மோடியின் ஆட்சியில் ரூ. 1.12 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கண்ணாடியை எங்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தவறான வரலாற்றைப் பரப்பும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை திரையிட அனுமதித்திருக்க கூடாது – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

சமூக தணிக்கை தொடர்பான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் தங்கள் தொழிலாளர் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படாது என்று மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சோனியா காந்தி, “சமூக தணிக்கையை ஆக்கப்பூர்வமானதாக மாற்ற வேண்டும், ஆனால் இதற்காக பணத்தை நிறுத்துவதன் மூலம் தொழிலாளர்களை தண்டிக்க முடியாது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கவும், வேலை செய்த 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஒரு வேளை பணம் செலுத்துவது தாமதமானால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரச நான் கேட்டுக்கொள்கிறேன், “என சோனியா காந்தி கூறியுள்ளார்.

Source: The New Indian Express

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்