தமிழகம் முழுவதும் மே 10 தொடங்கி 24 வரை முழு ஊரடங்கு: மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. மாவட்டங்களுக்குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்திற்கும் தனியார் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது.