Aran Sei

தமிழகம் முழுவதும் மே 10 தொடங்கி 24 வரை முழு ஊரடங்கு: மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்

மிழகம் முழுவதும் மே 10 ஆம் தேதி காலை 4 மணி தொடங்கி 24 ஆம் தேதி காலை 4 மணிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மே 10 ஆம் தேதி காலை 4 மணி தொடங்கி 24 ஆம் தேதி காலை 4 மணிவரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், இந்நாட்களில் மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகள் போன்றவை மட்டும் நண்பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை.

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

மேலும், மாவட்டங்களுக்குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்திற்கும் தனியார் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது.

அனைத்து தனியார் நிறுவங்களும், தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருவாரங்கள் ஊரடங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்றும் (மே 8), நாளையும் (மே 9) அனைத்து நிறுவனங்களும், கடைகளும் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்