Aran Sei

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக டிவிட்டர் மீது காவல்துறையில் புகார் – நெறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?

credits : ny times

ந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக, ஏத்சிஸ்டு ரெப்பப்ளிக் மற்றும் ட்விட்டர் நிறுவனம்  மீது டெல்லி காவல்துறை கணினி வழிக் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட ஏத்சிஸ்டு ரெப்பப்ளிக்கின் கணக்கின் மீது, ட்விட்டர் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, ஏத்சிஸ்டு ரெப்பப்ளிக் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு – டெல்லி சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை

ஏத்சிஸ்டு ரெப்பப்ளிக் தனது ட்விட்டர் கணக்கில் பெண்கடவுள் காளியின் உருவப்படத்தை பதிவிட்டு வெளியிட்ட கருத்து, ட்விட்டர் சமூக வலைதளத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தவறான சித்தரிப்பை உண்டாக்குவது மட்டுமல்லாது, எரிச்சல், சிரமம், ஆபத்து, தடை, அவமதிப்பு, மதஉணர்வுகளை புண்படுத்துவது , குற்றவியல் மிரட்டல், பகை, வெறுப்பு போன்றவற்றை சமூகத்திலும் ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள புகார் மனுவை அளித்த வழக்கறிஞர் ஆதித்ய சிங் தேஷ்வால் , “ட்விட்டர் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும், அவதூறு மற்றும் அவமதிக்கும் கருத்துக்களை பதிவிடுவது போன்ற இந்திய சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றத்திற்கு ஒரு கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது” என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் இணையதளத்தில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட விவகாரம் – நிர்வாக இயக்குநர்மீது புகாரளித்த பாஜக அமைச்சர்

மேலும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, உடனடியாக கைது செய்யப்படவேண்டுமெனவும் வழக்கறிஞர் ஆதித்ய சிங் தேஷ்வால் கூறியுள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்