Aran Sei

பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கித் தருவதாக பணமோசடி – பாஜகவை சேர்ந்த மதுவந்தி மீது காவல்நிலையத்தில் புகார்

த்மா சேஷாத்திரி பள்ளியில் (பிஎஸ்பிபி) இடம் (SEAT) வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது காவல்நிலையித்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ராஜகோபால், அவரது மகனுக்கு பிஎஸ்பிபி பள்ளியில் ஒன்றாம் வகுப்பிற்கு சீட் கோரி அந்தப் பள்ளியில் முக்கிய  பொறுப்பு வகிக்கும் மதுவந்தியை அணுகியிருக்கிறார்.

‘வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருக்கும் இந்தியர்கள்’ – சச்சின், அணில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களை வெளியிட்ட பண்டோரா பேப்பர்ஸ்

இதற்காக மதுவந்தி கேட்ட ஐந்து லட்ச ரூபாயை ராஜகோபால் அளித்தபிறகும், சீட்  கிடைக்காத நிலையில் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். பணத்தை திரும்பத் தருவதற்கு அலைக்கழித்து வந்த மதுவந்தி ஒரு கட்டத்தில், “பணத்தை அளிக்க முடியாது உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்” என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பணமோடி செய்ததாக மதுவந்தி மீது கே.கே நகர் காவல்நிலையத்தில் ராஜகோபால் புகார் அளித்துள்ளார். அவரின் புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : Kalaignar Seithigal

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்