Aran Sei

வானதி சீனிவாசனின் வேட்புமனுவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – இடதுசாரி முற்போக்கு இயக்கங்கள் தேர்தல் அலுவரிடம் மனு

தேர்தல் விதிமுறைகளை மீறி முறையான அனுமதியின்றி வாகன பேரணி நடத்தி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்ததாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது இடது சாரி முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

நேற்று (மார்ச் 31), கோவை மாநகர பகுதியில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

உ.பி முதல்வர் கோவை வருகை : கலவர கலாச்சாரத்தை கையிலெடுக்கும் பாஜக வேட்பாளரை தகுதி நீக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

அப்போது, அவரை வரவேற்க 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாகக் கோவை நகர வீதிகளில் சென்றுள்ளனர்.

கோவை நகர வீதிகளில் அனுமதியின்றி சென்ற அவர்கள், கலவரத்தைத் தூண்டும் விதமாக முழக்கமிட்டும் , அந்தப் பகுதியில் உள்ள கடைகளின் மீது கற்களை வீசியும், தாக்கியும் சமூக அமைதியைக்குலைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களின் சார்பாக இடது சாரி முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் மனுவொன்றை அளித்துள்ளார்.

‘பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியா?’ – திமுக கேள்வி

அந்த மனுவில் தேர்தல் விதி முறைகளை மீறிக் கலவரத்தைத் தூண்டும் விதமாக வாகன பேரணி நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கோவை நகர விதிகளில் உள்ள கடைகளை மூட வேண்டும் எனக்கூறி கற்களைக் கொண்டு தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி – உண்மை நிலவரம் என்ன?

மேலும், தேர்தல் விதியை மீறிச் செயல்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனவும், இந்தச் சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம்குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள புகார் மனுவில் “ஓம் காளி ஜெய் காளி, பாரத மாதாவுக்கு ஜெ, இந்து நாடு இந்து மக்கள் நாடு ‘ என மதவெறியூட்டும் முழக்கங்களை வாகன பேரணியில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் இந்து முன்னணியை சார்ந்தவர்கள் எழுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்