Aran Sei

டெல்லி காவல்துறைக்கு எதிரான புகார் – ஜாமியா மிலியா பல்கலைகழக மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

டெல்லி காவல்துறை மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழகம் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைகழக வளாகத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து, மாணவர்கள் மற்றும் பல்கலைகழக பாதுகாவலர்களைத் தாக்கியபோது, ‘அதிகப்படியான காவலர்களை’ பயன்படுத்தியதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா

2019 ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குடிமை சமூக உறுப்பினர்கள், அமைதியான முறையில் போராட அழைப்பு விடுத்திருந்தனர் என அந்த  மனுவில் கூறிப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அழைப்பை ஏற்று ஜாமியா மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

அப்போது, பல்கலைகழக வளாகத்திற்குள் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த காவல்துறையினர், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்கள்மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியதோடு, பல்கலைகழக சொத்துக்களை சேதப்படுத்தியதில் தான், போராட்டம் கலவரமாக மாறியது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி

ஜனநாயக உரிமையின் அடிப்படையில், அமைதியான முறையில் போராடி வந்த மாணவர்கள்மீது, தேவையற்ற சக்தியைப் பயன்படுத்தியதால், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் டெல்லி காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப் பல்கலைகழகம் கோரியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் மசூதிக்குள் நுழைந்தது மூலம், அந்தப் பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் மத உணர்வுகளைக் காவல்துறையினர் புண்படுத்தி விட்டனர்” என்றும், பல்கலைக்கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட எந்த ஒரு புகார்மீதும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையெனப் பல்கலைக்கழகம் அந்த மனுவில் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இர்ஃபான் பதான், சோனாக்சி சின்ஹா, சுவரா பாஸ்கர்… – விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள்

நூலகத்திற்கு அதிரடியாக நுழைந்த காவல்துறை, போராட்டதிற்கு சற்றும் தொடர்பில்லாத மாணவர்கள்மீது கண்மூடித்தனமாக நடத்திய  தாக்குதலில், முகமது மின்ஹாஜுதின் என்கிற மாணவர் ஒரு கண்ணில் பார்வையை இழந்ததாகப் பல்கலைக் கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ரஜத் கோயல், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்தனர் என்றும் மாணவர்கள்மீதான தாக்குதல் அந்த வகையில் அமைந்தது என்றும் கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.

எழுவர் விடுதலைக்கு மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

“நிலைமையைக் காவல்துறை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்றும், ஆனால் அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்தியை வேறுபடுத்தவே காவல்துறை இது போன்ற கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என நீதிபதி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறையின் நினைவு நாளன்று, பல்கலைகழக துணைவேந்தர் நஜ்மா அக்தர், “இங்கே எந்த நம்பிக்கையும் இல்லை, இதற்குப் பதிலாக நாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும், வன்முறையால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்க வேண்டும் என தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்