கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான மூவர் அமர்வு, கொரோனா இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 6 வாரத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாகவும்
அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்ற மனுமீதான விசாரணையின்போது இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறியுள்ளது.
மேலும், இந்த மனுமீதான விசாரணையின்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, இறந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்கினால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மொத்த பணமும் தீர்ந்து, நிதிச்சுமை ஏற்படும். இதனால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், கொரோனா அல்லது மற்ற பேரிடர்களை எதிர்கொள்ள இயலாது என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.