Aran Sei

கொரோனோ இரண்டாம் அலைப்பரவலிலும் மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? -மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

கொரனோ இரண்டாம் அலை பரவலுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைக்கடைகளை ஏன் மூட உத்தரவிடவில்லையென தமிழக அரசுக்கு  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் ,மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாகச் செலுத்தப்பட்ட நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி – மருந்தியல் வல்லுனரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

 

இதுகுறித்து தெரிவித்துள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இரண்டாம் அலை கொரனோப்பரவலுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் மதுக்கடைகள் மூட உத்தரவிடவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில்,கொரனோ தடுப்பூசி ஏற்றுமதியைத் தடைசெய்ய வேண்டுமெனவும், மக்களுக்குப் போதிய அளவில் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பாதிப்பினால் 180 பேர் மரணம் – தடுப்பூசி பாதிப்புகளை கண்காணிக்கும் குழு அறிக்கை

 

மேலும் ,கொரனோ பரிசோதனைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அதிக அளவில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு நிரந்தர அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது விவசாய உர விலையைக் குறைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Source:The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்