Aran Sei

5ஜி உபகரணங்கள் சீன நிறுவனத்திடம் வாங்கப்படுமா? – நேரடியாக பதிலளிக்க ஒன்றிய அமைச்சர் மறுப்பு

ந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வாங்கும் நடைமுறையில், ஹூவேய் நிறுவனம் கலந்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரடியாக பதிலளிக்க முறுத்துவிட்டார்.

இன்று (08.12.21) நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி  நேரத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் மனீஷ் திவாரி, இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் நடைமுறையில், சீனாவை சேர்ந்த ஹூவேய் நிறுவனம் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? அல்லது அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதில்அளித்த தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மனீஷ் திவாரியின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், 5ஜி தொழில்நுட்பத்திற்கு தேவையான உபகரணங்கள் நம்பிக்கையான நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

சீனாவில், 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹூவேய் நிறுவனம், தொலை தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்