Aran Sei

“பயிற்சி இடைவேளையின் போது தொழுகை நடத்தியது குற்றமா?” – கிரிக்கெட் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர்

த்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணி தேர்வின்போது, மதத்தின் அடிப்படையில் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்று, முன்னாள் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்காக 31 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள, 42 வயதான கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஅபர், உத்தரகாண்ட் மாநிலத்தின் பயிற்சியாளராக, ஒரு ஆண்டு காலத்திற்கு, அம்மாநில கிரிக்கெட் சங்கத்தால், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வசீம் ஜாஅபர், இஸ்லாமிய வீரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டாரென அம்மாநில கிரிக்கெட் வாரிய செயலாளர் மஹிம் வர்மாவும், அணி தேர்வின்போது மத ரீதியில் வீரர்களைத் தேர்வு செய்ய அழுத்தம் கொடுக்க முயன்றார் என, சங்க நிர்வாகிகளும் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மனவருத்தத்தின் காரணமாக ஜாஃபர், தனது பயிற்சியாளர் பதவியை, பிப்ரவரி 9 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

பீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்

”திறமையற்ற வீரர்களுக்கு ஆதரவாக, சங்கத்தின் செயலாளர்கள் மற்றும் தேர்வாளர்களின் குறுக்கீடு மற்றும் சார்பாகச் செயல்பட்டது” தனது ராஜினாமாவிற்கு காரணம் என்று தெரிவித்துள்ள வசீம் ஜாஃபர், வகுப்பு வாத பார்வையில் செயல்பட்டதாகத் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, மிகவும் வருத்தமளிக்கிறது எனவும், பிப்ரவரி 10 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்களைச் சந்திபில் தெரிவித்தார்.

”இக்பால் அப்துல்லாவை அணியின் கேப்டனாக நியமிக்க, நான் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டேன்” எனக் கூறுவதில் உண்மையில்லை என்று கூறிய ஜாஃபர், அணியின் பயிற்சியின்போது, மௌலவிகள் (இஸ்லாமிய மத அறிஞர்கள்) வந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளார்.

விவசாயிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது : அமெரிக்க பிரபலம் ட்ரேவர் நோவா கருத்து

”கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறி மௌலவிகளை அழைத்து வந்து தொழுகை செய்தோம் என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். டெஹ்ராடூனில் நடைபெற்ற பயிற்சி முகாமின்போது 2 அல்லது 3 வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே மௌலவிகள் வந்தனர். அவர்களை நான் அழைக்கவில்லை. அணியின் வீரரான இக்பால் அப்துல்லா தான், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு  என்னிடமும், அணியின் மேலாளரிடமும் அனுமதி கோரினார்” என ஜாஃபர் தெரிவித்தார்.

அணியின் பயிற்சி முடிவடைந்த பிறகு நடைபெற்ற தொழுகை, ஏன்  பிரச்னையாக மாறியது எனத் தெரியவில்லை? எனக் கேள்வி எழுப்பிய ஜாஃபர், ”தினமும் தொழுகைகளை அறையில் நடத்தி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொழுகைகளை கூட்டமாக நடத்த வேண்டும் எனவும், அதற்கு யாராவது வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம்… அதனால் வலைபயிற்சி முடிந்த பிறகு, உடைமாற்றும் அறையில் தொழுகை செய்தோம்” எனக் கூறினார்.

’பாகிஸ்தான், சீனா செல்ல நேரம் உள்ள பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை’ – பிரியங்கா காந்தி

”நான் மத ரீதியாகச் செயல்பட்டிருந்தால், தொழுகையின் நேரத்திற்கு ஏற்பப் பயிற்சியின் நேரத்தை மாற்றி இருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை” என வசீம் ஜாஃபர்  தெரிவித்தார்.

உத்தரகாண்ட் கிரிக்கெட் வாரியத்தால், ஒரு ஆண்டு காலத்திற்கு பயிற்சியாளராக, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாசிம் ஜாபர் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, அண்மையில் நடைபெற்ற சையத்  முஸ்தாக் அலி கோப்பை தொடரில், அந்த அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.

Sources : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்