Aran Sei

சிஏஏவுக்கான விதிகள் இயற்றப்பட்டு வருகிறது – உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான (சிஏஏ) விதிகளை இயற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் கொரோனா பரவலால் மட்டுமே காலதாமதம் ஏற்படுகிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருப்பதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

சிஏஏவிற்கான விதிகளை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு, மேற்கு வங்க சட்டப்பேரவை தீர்மானம் காரணம் இல்லையெனக் கூறியுள்ள அமித் ஷா, ”உண்மையில் விதிகளை இயற்ற ஒரு பெரிய அளவிலான பயிற்சி தேவைப்படுகிறது. கொரோனா பரவல் காலத்தில், இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நல்லதல்ல. அதனால் சிஏஏ விதிகள் தாமதப்படுகின்றன” என அமித் ஷா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிஏஏ குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் – தேசத் துரோக வழக்கு பதிந்த பாட்னா காவல்துறை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வரும் சூழலில், தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறுவது தொடர்பாக கேட்கபட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அமித் ஷா, ஒரு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடையும்போது தேர்தலைத் தாமதப்படுத்த ’இந்திய அரசியலமைப்பில் இடமில்லை’ என தி இந்து-விடம் கூறியுள்ளார்.

”அனைத்து கட்சிகளும் ஒண்றிணைந்து தேர்தலைத் தள்ளிவைக்கவோ, சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவோ அல்லது மாற்றுவழிகளை பரிந்துரைத்தாலோ சாத்தியம். ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தபிறகு எங்களுக்கு அதிகாரம் இல்லை” என அமித் ஷா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்