Aran Sei

உத்திரபிரதேச முதல்வர்குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஆளுநர் – தேச துரோக வழக்கில் கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம்

த்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள உத்திரபிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷியை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செப்டம்பர் 5 ஆம் தேதி, உள்ளூர் பாஜக தலைவர் ஆகாஷ் குமார் சக்சேனா அளித்த புகாரில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என குரேஷி மனு தாக்கல் செய்திருந்தார்.

துணை ஆய்வாளர் தேர்வில் கேட்கப்பட்ட பாஜக ஆதரவு கேள்விகள் – மன்னிப்பு கோரிய ஹரியானா பணியாளர் தேர்வாணய தலைவர்

மனுவை நீதிபதிகள் பிரதிங்கர் திவாகர், முகமது அஸ்லாம் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கில் விவரங்களைத் தாக்கல் செய்ய மூன்று நாட்கள் அவகாசம் கோரியது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், ”வழக்கின் உண்மை மற்றும் பின்னணி மற்றும் மனுதாரரின் பின்னணியை  கருத்தில் கொள்ள வேண்டும். 82 வயதான மனுதாரர் உத்திரபிரதேசம் மற்றும் இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்துள்ளார். அவரை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க, நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க வேண்டியது அவசியம்” என தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், வழக்கின் பின்னணி மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த விசாரணைவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரேஷி மீது சக்சேனா அளித்திருந்த புகாரில், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து தெரிவிக்கப்பட்ட அவதூறான கருத்து இரு சமூகங்களிடையே பதட்டத்தை உருவாக்கும் மற்றும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்