நகைச்சுவை கலைஞர் வீர் தாஸ் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க முடியாது என்று பாஜக ஆளும் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது மிஸ்ரா அமெரிக்காவில் உள்ளார். கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் இருக்கும் ஜான்.எப்.கென்னடி மைதானத்திலிருந்து நடத்திய ”நான் இரண்டு இந்தியாவிலிருந்து வருகிறேன்” என்று தலைப்பிட்ட 6 நிமிட காணொளியை வெளிட்டிருந்தார்.
மும்பையைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் வீர் தாஸ், அந்தக் காணொளியில் பல்வேறு தலைப்புகளில் பேசியுள்ளார். விவசாயிகள் போராட்டம், கொரோனா பிரச்சினைகள், பெண் ஒடுக்குமுறை குறிப்பாக பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை குறித்தும் அக்காணொளியில் பேசியுள்ளார்.
இப்படி கேலி செய்பவர்களை நாங்கள் அனுமதிக்க முடியாது. அவர் மன்னிப்பு கோரினால் நாங்கள் அனுமதிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று நட்டோராம் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.
அவருடைய கருத்துகள் நாட்டை அவமதிப்பதாக உள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் மகுவா மொய்த்ரா, காங்கிரஸைச் சேர்ந்த கபில் சிபல், சசி தாரூர் ஆகியோர் வீர் தாஸை பின்னிருந்து இயக்குவதாக மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வெளிநாட்டில் இந்தியாவை அவதூறாகப் பேசுகிறார். காங்கிரஸைச் சேர்ந்த கமல்நாத்தும் அதைச் செய்கிறார்” என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.