Aran Sei

‘மிஸ்டர்.மோடி எங்கள் குரலுக்கு செவி கொடுங்கள்’ – பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பெகசிஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்பு குறித்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிக்கொடுக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 8), அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிஸ்டர்.மோடி, எங்களின் குரலுக்கு செவி கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

டிவீட்டோடு இணைக்கப்பட்டுள்ள அக்காணொளியில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, சிவசேனா, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி எழுப்பிய கோரிக்கைகளும், முழக்கங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய பதிவுகள்:

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

‘பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்