Aran Sei

‘நானே ஒரு விவசாயியின் மகன்’: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Image Credits: The Week

விவசாயத் திருத்தச் சட்டங்கள் குறித்து விவாதிக்க முன்வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் முறையிட்ட பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், சட்டங்கள் பயனுள்ளதாக இல்லை எனில் அரசு அதை திருத்தம் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

“விவசாயிகளும், விவசாய குடும்பங்களில் பிறந்தவர்களும்தான் தர்ணாவில் அமர்ந்துள்ளார்கள். அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லி, துவாரகாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், தான் ஒரு விவசாயியின் மகன் என்று தெரிவித்துள்ளார். மோடி அரசு “விவசாயிகளின் நலனுக்கு விரோதமாக எதையும் செய்யாது” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

’விவசாயிகள் போராட்டத்தை கவனத்தில் கொள்ளுங்கள்’ – அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்

புதிய வேளாண் சட்டங்களை ஒரு பரிசோதனையாக முயற்சிக்குமாறு ராஜ்நாத் சிங் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இவை நன்மை அளிக்கவில்லை எனில், தேவையான அனைத்து திருத்தங்களையும் அரசு கொண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வேளாண் சட்டங்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படட்டும். அதன் பின் சட்டங்கள் பயனளிக்கவில்லை என்றல் அதில் திருத்தங்களை கொண்டு வரலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

“அரசு தனக்குத்தானே பேசிக்கொள்வதை நிறுத்த வேண்டும்” – விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்

அனைத்து சிக்கல்களையும் உரையாடல் மூலம் தீர்க்க முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். எனவே, அரசு அவர்களுக்கு ஒரு அழைப்பை விடுத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு

“புதிதாக ஏற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும்” எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்