கொலம்பியாவில் அரசு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், பரன்குலா நகரில் உள்ள கொலம்பஸ் சிலையை பீடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.
சமூக சீர்திருத்திற்கு அழைப்பு விடுக்கும் நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களை நிறைவடைந்திருப்பதை இந்த ஆர்ப்பாட்டங்கள் குறிக்கின்றன. காலனியம் மற்றும் ஒடுக்குமுறையின் அடையாளமாக கொலம்பஸ் சிலை இருப்பதாக சுதேச ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதிக்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள் என பரன்குலாவின் மேயர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவியுல்ல எதிர்ப்பின் ஒரு பகுதியாக கொலம்பஸ் சிலை அதன் பீடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம், தென்மேற்கு நகரான போபயன் நகரத்தில் வைக்கப்பட்டிருந்த 16 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் அரசர் பெலல்காசர் சிலை முதலில் அகற்றப்பட்டது.
மிசாக், நாசா மற்றும் பிஜாவோ பழங்குடியினத்தை சேர்ந்த குழு நடத்திய ஆய்வில், இனப்படுகொலை, அடிமைப்படுத்துதல், சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் அவர்களின் மூதாதையர் நிலங்களை திருடியதில் குற்றவாளி பெலல்காசர் என்பதை கண்டறந்த பிறகே சிலைகளை அகற்றியதாக தெரிவித்தனர்.
அப்போது காலி நகரத்தில் இருந்த பெலல்காசரின் மற்றொரு சிலையும் அகற்றப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் ஆக்கிரமிப்பாளரான கோன்சாலோ ஜிமெனெஸ் டி குசாடாவின் சிலை உள்ளுர் எதிர்ப்பாளர்களால் அகற்ப்பட்டுள்ளது.
மேலும், கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தபோது அவருக்கு ஆதரவளித்த காஸ்டில் ராணி இசபெல்லாவின் சிலையும் உள்ளுர் எதிர்ப்பாளர்களின் இலக்காக மாறியிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக சிலை அகற்றப்பட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு இடது சாரி பார்க் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும், இடையே சமாதான உடன்படிக்கை கையெழுத்திட்ட பின்னரும் கூட, உடன்படிக்கையை ஏற்காத வலது சாரி துணைப்படைகளாலும் கிளர்ச்சியாளர்களாலும் உள்நாட்டு குழுக்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
சமாதான நிறுவனமான இன்டெபாஸ் தகவலின்படி, இந்த ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட உள்நாட்டு உரிமைகள் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை பாதுக்காக்க இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என உள்நாட்டு குழுக்கள் கோருகின்றன.
Source : BBC
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.